பிஎஸ்என்எல் சேவை துண்டிப்பு

மூணாறு, ஜன.14: முக்கிய சுற்றுலாத்தலமான மூணாறில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தோட்டத் தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.

தென்னகத்து காஷ்மீர் என்று அறியப்படும் மூணாறில் பொங்கல் விடுமுறைகளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மூணாறில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு வசதி நேற்று காலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. அடிமாலி, மறையூர், தேவிகுளம், எல்லப்பட்டி, வட்டவடை பகுதிகளில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மூணாறு மற்றும் எஸ்டேட் பகுதிகளில் பி.எஸ்.என்.எல் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட கோபுரங்கள் உள்ள நிலையில் சேவை துண்டிக்கப்பட்டதன் காரணமாக தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர். இதர தனியார் தொலைத்தொடர்பு வசதிகள் மூணாறில் இருந்தும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவது பி.எஸ்.என்.எல் சேவை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: