வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

திருமங்கலம், ஜன.13: திருமங்கலம் கள்ளிக்குடி தாலுகாவில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் முகாமினை ஆர்டிஒ முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் முகாம் கடந்த இரண்டு வாரங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் நடைபெற்றது. நேற்று திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடியில் நடந்த சிறப்பு முகாமினை திருமங்கலம் ஆர்டிஓ முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து பதிவு செய்யும் தேர்தல் அலுவலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

கள்ளிக்குடிக்கும் சென்ற ஆர்டிஓ அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். ஆர்டிஓவுடன் தேர்தல் தனி தாசில்தார் மாலதி, திருமங்கலம் வருவாய் ஆய்வாளர் செந்தில்வள்ளி, டவுன் விஏஓ பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Related Stories: