பயன்பெற கலெக்டர் அறிவுறுத்தல் தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவியின் சமுதாய பணியை பாராட்டி கண் கண்ணாடி பரிசு

திருவாரூர், ஜன.13: திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீடாமங்கலம் வட்டம், காளாச் சேரி ஊராட்சியை சேர்ந்த மாணவி ரம்யாவின் சமுதாய பணியை மாவட்ட கலெக்டர் ஆனந்த் பாராட்டி அவருக்கு கண் கண்ணாடி வழங்கினார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம் காளாச்சேரி ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு கல்வி பயின்று வரும் காளாச்சேரி மேலத் தெருவில் வசிக்கும் செந்தில்குமார் என்பவரின் இளைய மகளான ரம்யா (13) மாற்றுத் திறனாளியாகவுள்ள தனது அக்காவிற்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த தனது முயற்சியால் பள்ளி ஆங்கில ஆசிரியரின் உதவியுடன் பஞ்சு மற்றும் மூலிகை பொருட்களை (காற்றாழை, துளசி, வேம்பு, அத்தி மற்றும் மஞ்சள்) கொண்டு நாப்கின் தயாரித்து வழங்கியதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படாத காரணத்தினால் கிராமத்திலுள்ள மகளிருக்கும் இலவச மாக நாப்கின் வழங்கி வந்துள்ளார்.

சிறுமி ரம்யாவின் பெற்றோர்கள் விவசாய கூலி வேலை செய்த வந்த நிலை யிலும் மகளுக்கு உதவி வந்துள்ளனர். ரம்யாவின் சமுதாய பணியினை அறிந்த மாவட்ட கலெக்டர் ரம்யாவின் கல்வி மற்றும் இதர தேவைக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மேற்கொண்ட நடவடிக்கையில் ரம்யாவிற்கு கரும் பலகையில் எழுதும் எழுத்தினை பார்ப்பதிலுள்ள சிரமத்தினை அறிந்து கண் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. தூரப்பார்வை குறைப்பாடுள்ளதால் திருவாரூர் அரிமா சங்கத்தின் மூலமாக கண் கண்ணாடி பெறப் பட்டது. சுகாதார நலனுக்காக பொருளாதார நிலையில் சிரமம் இருப்பினும் இலவச மாக நாப்கின் வழங்கி வரும் மாணவி ரம்யாவின் செயல்பாட்டினை பாராட்டி மாவட்ட கலெக்டர் ஆனந்த் கண் கண்ணாடி அணிவித்து வாழ்த்தினார். இந் நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் லைய ன்ஸ் கிளப் அரிமா சங்க நிர்வாகி ராஜ்குமார் உடன் இருந்தனர்.

Related Stories: