காஞ்சிபுரம் உழவர் பயிற்சி நிலைய துணை வேளாண்மை இயக்குனர் திருமயம் வட்டாரத்தில் ஆய்வு

புதுக்கோட்டை, ஜன.13: காஞ்சிபுரம் உழவர் பயிற்சி நிலைய துணை வேளாண்மை இயக்குனர் ஜோசப்விக்டர், திருமயம் வட்டாரத்தில் மெய்யப்பட்டி கிராமத்தில் மெய்யப்பன் என்ற விவசாயியிக்கு ரூ.10 ஆயிரம் மானியத்தில் வழங்கிய பம்ப்செட், அரசம்பட்டி கிராமத்தில் சண்முகம் என்ற பயனாளிக்கு ரூ.34 ஆயிரம் மானியத்தில் வழங்கிய ரோட்டவெட்டர் மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கிய பறவை தடுப்பு வலை மற்றும் மண்புழு கழிவு உரம் தயாரிப்பு செயல் விளக்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பொன்னமராவதி வட்டாரத்தில் வாழக்குறிச்சி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பயறு செயல் விளக்கத்தையும், அட்மா திட்டத்தில் அமைக்கப்பட்ட சூரியஒளி விளக்குப்பொறி, உளுந்து வரிசை நடவு மற்றும் பசுந்தாள் உர சாகுபடி செயல் விளக்கங்களை ஆய்வு செய்தார். பின்னர் அன்னவாசல் வட்டாரத்தில் கீழக்குறிச்சி கிராமத்தில் சாலைவல்லான் தோட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாலிதீன் சிட் செயல்விளக்கம் மற்றும் வீரையா தோட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள பண்ணை குட்டை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது விவசாயிகளுக்கு மானியத்தில் மஞ்சள் ஒட்டும்பொறி மற்றும் காய்கறி தரம் பிரிக்கும் பெட்டிகள் வழங்கப்பட்டது. வேளாண்மை துணை இயக்குனர்கள் பெரியசாமி, சுருளிமலை உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: