குப்பை கழிவுகள் எரிப்பு புகையால் மக்கள் அவதி

பண்ருட்டி, ஜன. 13:  பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தில் வீதிகள்தோறும் கொட்டப்படும் குப்பைகளை களப்பணியாளர்களை கொண்டு சேகரித்து ஓரிடத்தில் கொட்டி தரம் பிரிக்கப்படுகிறது. மீதி உள்ள கழிவுகளை தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். அப்படி தீயிட்டு கொளுத்தும்போது, அருகில் பணியாளர்கள் யாருமில்லாததால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இதன் காரணமாக எரியும் தீயால் கிராமம் முழுவதும் புகை மண்டலமாக

காணப்படுகிறது. கடந்த மூன்று தினங்களாக தீ எரிவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்படும் புகை மூட்டத்தால் பொதுமக்கள், சிறுவர்கள், முதியோர்கள் மூச்சு திணறலால் அவதிப்படுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் இதனை

சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: