மானாமதுரை, ஜன.12: மானாமதுரையில் நடந்த ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றதால் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 14 ஒன்றியக்கவுன்சில் பதவிகளுக்கான தேர்தலில் திமுக 7 இடங்களையும், அதிமுக 5 இடங்களையும், சிபிஐ ஒன்றிலும், அமமுக ஒன்றிலும் வெற்றிபெற்றன. சிபிஐ திமுக கூட்டணியில் இருந்த போதிலும் அமமுக ஒன்றியக்கவுன்சிலர் திமுகவுக்கு வாக்களித்தார். இதனால் தலைவர் தேர்தலில் திமுக ஒன்பது இடங்களை பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியது.