புதுக்கோட்டையில் ஆம்னி பேருந்துகளுக்கு தனி பஸ் நிலையம் அமைக்க வேண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில்

புதுக்கோட்டை, ஜன.9: பொதுத்தேர்வுக்கு தயராகும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, இலுப்பூர், புதுக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த 3 கல்வி மாவட்டங்களிலும் 90க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பெருவாரியான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் திருப்தியுடன் முழுமையாக படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்க சரியான பென்ஜ் டேபிள் வசதிகள் முழுமை பெறாமல் உள்ளது. சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. சில பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட கழிப்பறை வசதிகள் இல்லை. இதேபோல் ஒரு சில பள்ளிகளில் சிமென்ட் தரைகளில் சில இடங்களில் பெயர்ந்து காணப்படுகிறது. ஒரு சில பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் இருந்தால் கணக்கு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ஒரு சில பள்ளியில் கணக்கு ஆசிரியர் பணியில் இருந்தால் உயிரியியல் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் மாணவர்கள் அந்த பாடங்கள் குறித்து தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நிலமை நீடிப்பால் மாணவர்கள் மிகுந்த வேதனையடைந்து வருகின்றனர். சில பள்ளிகளில் ஆய்வக வசதிகள் இல்லாமல் உள்ளது. வேதியில், உயிரியியல் பாட்களில் செய்முறை அறிவு இல்லாமல் மாணவர்கள் இருக்கின்றனர். இதனால் அரசு இனியாவது மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: