வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

வேதாரண்யம், ஜன.8: வேதாரண்யம் நகர்புறம் தோப்புத்துறையில் அமைந்துள்ள அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயில் பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோயில். இந்த கோயிலில் அமைந்துள்ள கோயிலுக்கு வேதநாராயண பெருமாள் என்ற பெயரும் உண்டு.வேண்டும் வரங்களை அளித்து ராமர் தீர்த்தம், லெட்சுமண தீர்த்தம், சீதாதீர்த்தம் கொண்ட ஸ்தலமாக விளங்குகிறது. பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள். இந்த பெருமாளை அபிஷ்ட வரதராஜ பெருமாள் என அழைக்கலாயினர். இக்கோயில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 27.12.2019 முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பெருமாள் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோவில் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்பெற்று பரமபாத வாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து ராபத்து உற்சவம் 07.01.2020ம் தேதிமுதல் நடைபெறுகிறது. 16.01.2020 அன்று கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: