பேளுக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

சேந்தமங்கலம், ஜன.8: சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சியில் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் பரிசு மற்றும் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகள் வரவேற்றார். நாமக்கல் சின்ராஜ் எம்.பி., சந்திரசேகரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தர். அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி-சேலைகளை வழங்கினர். அப்போது அமைச்சர் தங்கமணி பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 7 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. சேந்தமங்கலம் தொகுதியில் மட்டும் இதுவரை ₹100 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை சுற்றுலா தலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ₹9 கோடியில் மாற்றுப்பாதை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் மங்கமணி பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. சுந்தரம், கூட்டுறவு சங்கத் தலைவர் ராமசாமி, துணை பதிவாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: