சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சைகள் கை ஓங்கியது

சீர்காழி, ஜன.3: சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் திமுக, அதிமுக, சுயேச்சைகள் என 98 பேர் போட்டியிட்டனர். இதில் சுயேட்சையாக மணிக்கிராமம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பஞ்சு குமார், ராதாநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அறிவழகன், திருவெண்காடு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஜான்சிராணி, கொண்டல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட துர்கா மதி மகேந்திரன் ஆகிய நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். இந்த நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார்களோ அந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஒன்றியகுழு தலைவராக வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுயேச்சை வேட்பாளர்களுக்கு மவுசு ஏற்பட்டு இதனால் சுயேச்சை கட்சி வேட்பாளர்களுக்டு அரசியல் கட்சியினர் வலை வீசத் தொடங்கியுள்ளன.

Related Stories: