திண்டல் வேளாளர் வித்யாலயா பள்ளி விளையாட்டு விழா

ஈரோடு, டிச. 31:  ஈரோடு திண்டல் வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. இவ்விழாவை அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, அறக்கட்டளையின் தாளாளர் சந்திரசேகர் மற்றும் பொருளாளர் அருண் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், இயக்குனர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கண்கவர் நடனங்களும் நடந்தன. முதுநிலை முதல்வர் நல்லப்பன், முதல்வர் பிரேமலதா, துணை முதல்வர் பிரியதர்ஷினி, நிர்வாக அதிகாரி  முத்து, மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். விளையாட்டு விழா உடற்கல்வி அலுவலர் வேடியப்பன் தலைமையில், அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் சிறப்பாக நடத்தினர்.

Related Stories: