வேதாரண்யம் அருகே மூலிகை இனங்காணும் பயிற்சி கருத்தரங்கம்

வேதாரண்யம், டிச.30: வேதாரண்யம் அருகே மூலிகை இனங்காணும் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. வேதாரண்யம் தாலுக்கா செட்டிப்புலத்தில் தமிழ் பாரம்பரிய சித்தமருத்துவ பாதுகாப்பு இயக்கம் மற்றும் வேதாரண்யம் வள்ளலார் தருமசாலை இணைந்து மூலிகை இனங்காணும் பயிற்சி கருத்தரங்கினை நடத்தியது. கருத்தரங்கிற்கு இயக்க பொதுச் செயலாளர் மணிவாசகம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சதாசிவம், அண்டகத்துறை ராஜகுமார், மஞ்சக்கண்ணிசதாசிவம் ஆகியோர் முன்னிலையில் செட்டிப்புலம் கிராமத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

செட்டிப்புலம் கோவிந்தசாமி வரவேற்றார். தமிழகஅரசு வனத்துறை மேம்பாட்டுக்குழு தலைவர் கோடியக்கரை சையதுபாரக், கோடியக்காடு சண்முகசுந்தரம், கரியாப்பட்டினம் புண்ணியஜோதி ஆகிய வன அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். ஆஸ்துமாநோய்க்கு மருந்தாகும் உத்தாமணி இலை, பக்கவாதத்திற்கு மருந்தாகும் விரளி இலை, உப்புநீருக்கு மருந்தாகும் நருவிலி இலை, கல்லீரலை குணப்படுத்தும் நுணா இலை, சர்க்கரைநோய் தீர்க்கும் ஆவாரை என பல்வேறு மூலிகைசெடிகளின் பயன்குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேதாரண்யம் வள்ளலார் தருமச்சாலை நிர்வாகி தமிழ்த்தூதன் நன்றி கூறினார்.

Related Stories: