ஒகளூரில் 70.20 சதவீதம் பதிவு அரியலூர் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா?

அரியலூர், டிச. 30: அரியலூர் மாவட்டத்தில் 2ம் கட்டமாக இன்று உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில் தா.பழூர் ஒன்றியம் மணகெதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் த.கைகளத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்று கலெக்டர் ரத்னா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், 3 ஒன்றியங்களில் உள்ள 495 வாக்குச்சாவடி மையங்களில் 201 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதில் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் நேரடியாக கண்காணிக்க வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமராக்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்படவுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் 63 பேர் நுண்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது என்றார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: