ஆத்தூரில் கழிவுநீரோடையில் விழுந்து எலக்ட்ரீசியன் பரிதாப பலி

ஆறுமுகநேரி, டிச. 29:  ஆத்தூரில் கழிவுநீரோடையில் தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 ஆறுமுகநேரி அடுத்த ஆத்தூர் அருகேயுள்ள  செல்வன்புதியனூரைச் சேர்ந்த கோபால் மகன் சிவக்குமார் (37). எலக்ட்ரீசியன். இவருக்கும், சுப்புலட்சுமி என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாத நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான சிவக்குமார், நேற்று மாலை 4.30 மணியளவில் ஆத்தூர் முஸ்லிம் தெரு அருகே கழிவுநீரோடை பாலத்தின் மேல் அமர்ந்தபடி மது குடித்துகொண்டிருந்தார். இதில் போதை அதிகமானதால் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் ஓடையில் தலைகீழாக விழுந்தார். இதில் ஓடையில் மூழ்கிய அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.  தகவலறிந்து விரைந்து வந்த ஆத்தூர் போலீசார், உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் . மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

பிரகாசபுரத்தில் புத்தாடை வழங்கல்

நாசரேத், டிச. 29:  நாசரேத் அருகே பிரகாசபுரம் எஸ்.டி.ஏ. சபையில் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் மளிகை சாமான், அரிசி, புத்தாடை என பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது.

 இதே போல் இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு பொருட்கள், அரிசி மற்றும் புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது. தலைமை வகித்த சபை பாஸ்டர் அருளானந்தம், ஜெபித்து துவக்கிவைத்தார். 27 பேருக்கு உணவுப்பொருட்கள், 500 பேருக்கு இலவச அரி, 270 பேருக்கு புத்தாடை என பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சபை பாஸ்டர் அருளானந்தம் டேனியல் தலைமையில் சபை விசுவாசிகள் செய்திருந்தனர்.

Related Stories: