புதுப்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

கந்தர்வகோட்டை, டிச.27: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் வாக்குசீட்டுகளை எண்ணும் மையமாக புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். புதுபட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படவுள்ளது. முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்று வாக்குபதிவு நடைபெறுகிறது.

வாக்குபதிவு முடிவு பெற்றவுடன் வாக்கு பெட்டிகள் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்டிராங் ரூமில் பாதுகாப்போடு வைக்கப்பட்டு 2ம் தேதி எண்ணப்படவுள்ளது. அதற்காக ஏற்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி பார்வையிட்டார். கல்லூரி வெளியிலும், உள்ளேயும் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகள் மற்றும் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்களை பார்வையிட்டார். தடுப்புகளை பெயரளவிற்கு செய்யாமல் உறுதியாக இருக்கும்படி செய்ய உத்தரவிட்டார். ஆய்வின்போது திட்ட இயக்குனர் காளிதாஸ், மாவட்ட ஊராட்சி குழு மற்றும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜேந்திரன், காமராஜ், தாசில்தார் சதீஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வன் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: