ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பட்டதாரி பெண் வேட்பாளர் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

வேதாரண்யம், டிச.27: வேதாரண்யம் தாலுகா, ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் அனிதா மணிகண்டன். பொறியியல் பட்டதாரியான அனிதா நேற்று அண்டர்காடு, ஆதனூர், கோவில்தாவு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக வாக்குகள் சேகரித்தார். அப்போது கோவில்தாவு பகுதியில் மண்சாலை உள்ள இடங்களை தார்சாலையாக மாற்றி அமைப்பேன், சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் இந்த ஊராட்சியில் மின் இணைப்பு கிடைக்காத வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பேன், சமுதாயக்கூடம் மற்றும் குடிநீர் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்வேன், 80 ஏக்கரில் உள்ள இந்த பகுதியில் கொள்ளப்புலம் ஏரியை தூர்வாரி தண்ணீர் தேக்கி விவசாயத்திற்கு பயன்படும் வகையில் ஏற்பாடு செய்வேன், சுமார் 4000 வாக்காளர்கள் உள்ள இந்த பகுதியில் ஒரே ஒரு பகுதிநேர அங்காடி மட்டும் உள்ளது.

பொதுமக்கள் ரேஷன் பொருட்களை எளிதாக வாங்க மூன்று இடங்களில் அமைக்க பாடுபடுவேன், அரசின் நலத்திட்டங்கள் வெளிப்படையாக நடைபெறவும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்திடவும் 100 நாள் வேலை திட்டத்தை முறையாக நடைபெறவும் ஏற்பாடு செய்வேன் என்று கூறி வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வேட்பாளருடன் நூற்றுக்கணக்கான ஆண், பெண்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Related Stories: