குடியாத்தம்: குடியாத்தத்தில் விவசாய நிலத்தில் மேய்ந்ததால், அடித்து கொன்றதாக இறந்த கோழியுடன் வந்து போலீசில் பெண் புகார் அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேத்துவண்டையை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி மலர். இவர் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது கோழி அருகில் உள்ள ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்று மேய்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரமடைந்த அந்நிலத்தின் உரிமையாளர், கோழியை பிரம்பால் அடித்துள்ளார். இதனால், கோழி அங்கேயே சுருண்டு விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த மலர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இறந்த கோழியை கையில் எடுத்துக் கொண்டு குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு தனது கோழியை அடித்துக்கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கோழியுடன் வந்து பெண் புகார் அளித்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….
The post விவசாய நிலத்தில் மேய்ந்ததால் கொன்றதாக இறந்த கோழியுடன் வந்து போலீசில் பெண் புகார் appeared first on Dinakaran.
