பெண்கள் பாதுகாப்பிற்கு காவலன் எஸ்ஓஎஸ் செயலியை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்

மயிலாடுதுறை, டிச.13: பெண்கள் பாதுகாப்பிற்காக ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்போர் கட்டாயம் காவலன் எஸ்ஓஎஸ் செயலியை வைத்திருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர். மயிலாடுதுறை அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி, பாலையூர் காவல்நிலைய ஆய்வாளர் வேலுதேவி மற்றும் பெண் போலீசார் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர். குறிப்பாக காவலன் எஸ்ஓஎஸ் அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு செல்போனில் அமைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவு மற்றும் அவசர தேவைக்கு 100 இலவச போனுக்கு பதிலாக இந்த காவலன் எஸ்ஓஎஸ் பட்டனை ஒருமுறை தொட்டால் போதும் காவலன் செயலி உபயோகிப்பாளரைகாவலன் கட்டுப்பாட்டு அறை மூலம் உடனடியாக திரும்ப அழைக்கும் வசதி உள்ளது.

உபயோகிப்பாளரின் தொடர் கண்காணிப்பு வசதி உள்ளது. உபயோகிப்பாளரின் இருப்பிட தகவல்கள் மற்றும் வரைபடம், அவர் இந்த செயலியில் பதிவு செய்துள்ளவர்கள் எண்களுக்கு தானாகவே பகிரப்படும். காவலன் எஸ்ஓஎஸ் பட்டனை தொட்டவுடனேயே கைபேசியின் கேமரா தானாகவே 15 வினாடிகள் வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பிவிடும், அலை தொடர்பு இல்லாத இடங்களில் எச்சரிக்கை செய்தியினை காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பும் வசதி உள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழ் என இருமொழிகளிலும் பயன்படுத்தலாம். இது நம்மை காக்கும் காவலன் எஸ்ஓஎஸ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள், கடத்தல் திருட்டு, ஈவ்டீசிங் என அனைத்து சிக்கல்களில் இருந்து விடுதலை பெற ஒரு சிறந்த செயலியாகும். விரல் நுனியில் தொழில்நுட்பம் வாயிலாகவே எளிதாகவும். நேரடியாகவும் மாநில தகவல் தலைமைக் கட்டுப்பாடு அறையைத்தொடர்பு கொள்ளலாம்.

ஆபத்தில்அரணாய் நிற்க யார்உதவியை நாடலாம் என்ற கேள்விக்கு அழைத்த ஐந்து நொடிகளிலேயே நம் சிக்கலை வீடியோ ரெக்காட்டிங்கலும் தெரிவிக்கும் வசதியில் காவலன் எஸ்ஓஎஸ் ஆப். ஆகவே வரும் முன் காப்போம் என அறிவுரை வழங்கினர்.

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி காவல்துறை சார்பில் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனை கடத்தல் திருட்டு குறித்து அவசர உதவிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவலன்செயலி குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை வகித்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா காயத்ரி முன்னிலை வகித்தனர். முதல்வர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகள், பெண் கடத்தல், திருட்டு போன்ற அவசர காலத்தில் காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவலன் செயலியை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியைகள், ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஜெயந்தி கிருஷ்ணா நன்றி கூறினார்.

Related Stories: