விண்ணப்பிக்க அழைப்பு ஆலத்தூரில் பூத் கமிட்டி கூட்டம் 42 குடும்பத்தினர் திமுகவில் இணைந்தனர் மாவட்ட செயலாளர் வரவேற்றார்

நாகப்பட்டினம், டிச. 17: திருமருகல் அருகே ஆலத்தூரில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன் தலைமை வகித்தார். ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கவுதமன் ஆலோசனைகள் வழங்கினார். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது, திமுக ஆட்சியின் நல்ல பல திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கிளை செயலாளர் சந்திரசேகர் ஏற்பாட்டில் முருகவேல் தலைமையில் ஊராட்சி பகுதியை சேர்ந்த சுமார் 42 குடும்பத்தினர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைத்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் கவுதமன் சால்வை அணிவித்து வாழ்த்தி, வரவேற்றார்.

Related Stories: