பதற்றமான வாக்குச்சாவடிகள் காவல்துறையினருடன் ஆலோசனை

வடலூர், டிச. 13: குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 51 கிராம பஞ்சாயத்து உள்பட பதற்றமான, மிக பதற்றமான வாக்குச்சாவடிகளின் நிலை குறித்து காவல் துறையினருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை நடத்தினார். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேல், சிற்றூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமார், நெய்வேலி துணை கண்காணிப்பாளர் லோக நாதன், குறிஞ்சிப்பாடி பயிற்சி டிஎஸ்பி சுரேஷ் மற்றும் வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, மந்தாரக்குப்பம், நெய்வேலி நகரம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கலந்துகொண்டனர். பதற்றமான, மிக பதற்றமான வாக்குச்சாவடி

களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், என்ன வகையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து குறிஞ்சிப்பாடியில் வாக்குகள் எண்ணப்பட உள்ள பள்ளியில், வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டனர்.

Related Stories: