பேரூராட்சி அதிரடி நடவடிக்கை குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

திருத்துறைப்பூண்டி, டிச.11: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்டதலைவர் முஹம்மது மிஸ்கீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து. இருப்பதாவது: நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையே குடியுரிமை திருத்த மசோதாவை மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமைவழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மட்டும் புறக்கணிக்கப்படும் வகையில் இந்தசட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. .இந்தமசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தமசோதாவை அதிமுகஆதரிப்பது என்பது முஸ்லிம்களின் நெஞ்சில் குத்துவதாகஅமைந்துள்ளது. அதிமுக வின் இந்த ஆதரவு முஸ்லிம்களை விட்டு அது தூரம் செல்வதாகவேஅமைகிறது..இந்தியஅரசியல் சாசனம் ஆர்ட்டிக்கல் 14 மற்றும் 21 மதஅடிப்படையில் குடிமக்களை பிரித்தாளாக் கூடாது என்று கூறியுள்ளது. இதனைபின்பற்றாமல்ஆட்சியாளர்கள் இருப்பது வேதனைஅளிக்கிறது.இதைஆதரித்தால் அதிமுக விற்கு மிகப்பெரும் அரசியல் பின்னடைவு தமிழகத்தில் ஏற்படும். இ்வ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: