வேளாண் அதிகாரி தகவல் சுவாமிமலை முருகன் கோயில் அன்னதான கூடத்தின் சுவர் இடிந்து விழுந்தது

கும்பகோணம், டிச. 11: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் அன்னதான கூட சுவர் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோயில் உள்ளது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்வித்ததால் சிவகுருநாதனாக விளங்கும் சிறப்பு பெற்ற திருத்தலமாகும்.இந்த கோயிலில் அறநிலையத்துறை சார்பில் முக்கியமான நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து கோயில் வளாகத்தல் உள்ள பழமையான கட்டிடத்தை அன்னதான கூடமாக மாற்றினர்.

இதையடுத்து தினம்தோறும் கோயிலி–்ல் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூடத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உட்கார்ந்து உணவருந்தலாம். இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் ஏராளமான வீடுகள், தொகுப்பு வீடுகள், பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இதேபோல் சுவாமிமலை கோயில் வளாகத்தில் இருந்த அன்னதான கூடத்தின் சுவர் கடந்த 2 நாட்களுக்கு முன் இடிந்தது. இதனால் அன்னதான கூடத்தில் பக்தர்கள் அமர்ந்து உணவருந்த அச்சமடைந்துள்ளனர். அதன் அருகே சமையல் கூடம் இருப்பதால் அதில் வேலை செய்பவர்கள், மற்ற பகுதியும் விழுந்து விடுமோ என்ற பயத்தில் சமைத்து வருகின்றனர். மிகவும் பழமையான இக்கட்டிடத்தின் சுவரில் மழைநீர் புகுந்து சுவரின் ஒரு பகுதி மட்டும் விழுந்துள்ளது. மேலும் சுவரின் மற்ற பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

Related Stories:

>