எஸ்ஆர்வி பப்ளிக் பள்ளியில் 2ம் ஆண்டு விளையாட்டு விழா

ராசிபுரம், டிச.11:  ராசிபுரம் எஸ்ஆர்வி பப்ளிக் பள்ளியில் 2ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைவர் மருத்துவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் மனோகரன் வரவேற்றார். பொருளாளர் சுப்பிரமணி , வஜ்ரவேல், துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் சிறப்பு விருந்தினராக  மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் கலந்துகொண்டு, விளையாட்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது, அவர் பேசுகையில், உடல், உள்ளம், ஆன்மா இந்த மூன்றின் ஒட்டுமொத்த வளர்ச்சி தான் கல்வி. ஒரு பாறையை உடைக்க வேண்டும் என்றால், அந்த பாறையை தொடர்ந்து நூறுமுறை சம்மட்டியால் ஓங்கி அடிக்கிற போது சுக்கு நூறாக உடைந்தது. இந்த பாறை உடைவதற்கு 100 அடி தான் காரணம் என்றால் அது அல்ல. அந்த பாறையின் மீது அடிக்கப்படும் ஒவ்வொரு அடியுமே அந்த பாறைக்கு அழுத்தத்தைத் தருகிறது. எனவே நீங்கள் விளையாட்டு போட்டியில் வட்ட, மாவட்ட மற்றும் அளவில் மாநில அளவில் வெற்றிபெற்று உயரவேண்டும் என்றார். விழாவில் நாமக்கல் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் ரவி நன்றி கூறினார். இதில் பள்ளியின் மாணவ, மாணவியர்கள், பெண்கள் பள்ளியின் முதல்வர் சரஸ்வதி, எஸ்ஆர்வி எக்ஸல் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: