போடி பகுதியில் தட்டாம்பயறு அறுவடை தீவிரம்

போடி, டிச. 10: போடி பகுதியில் தட்டாம்பயறு அறுவடைப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போடி பகுதியில் கிணற்று பாசனம் மற்றும் மழையை நம்பும் மானாவாரி விவசாயிகள், பல நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பாக போ.தர்மத்துப்பட்டி, காட்டுப்பட்டி, மேலசொக்கநாதபுரம், சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், நாகலாபுரம், முந்தல் உள்பட பல்வேறு கிராமங்களில் தட்டாம்பயறு தட்டாம்பயறு விதைகளை பண்படுத் திய நிலத்தில் விதைப்பு செய்திருந்தனர். தற்போது தட்டம்பயறு அறுவடைக்கு தயாராகி உள்ளது.

கடந்த மாதங்களில் நல்ல வளர்ச்சி பருவத்தில் இருந்த தட்டாம் பயறுகளுக்கு ஊக்க மருந்தாக பெய்த மழை மாமருந்தாக அமைந்துள்ளது. இதன் காரணமாக மகசூல் அதிகம் கிடைப்பதுடன் லாபம் கிடைக்கும் என விவசாயிகள் அறுவடைப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்த தட்டாம்பயறுகளை பிரித்தெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

Related Stories: