கார்த்திகை தீபத்தையொட்டி சிவன் கோயில்களில் இன்று மாலை மகாதீபம்

சேலம், டிச.10: கார்த்திகை தீபத்தையொட்டி, சிவன் கோயில்களில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது.இன்று கார்த்திகை தீபத்தையொட்டி, சிவன் கோயில்களில் காலையில் இருந்தே சிறப்பு அபிஷேகம், அலங்காரஇ ஆராதனைகள் நடக்கிறது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் காலையில் சிவன், சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கறிது. காலை பரணி தீபமும், மாலை கோயில் முன்புறம் சொக்கப்பனை எரிக்கப்பட்ட, பின்னர் கல்தூணில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதேபோல் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி, சேலம் மாநகர பகுதிகளில் அகல் விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. ஒரு முகம், ஐந்துமுகம் கொண்ட விளக்கு, மேஜிக் விளக்கு, குபேர விளக்கு, பிரதோஷ விளக்கு, தட்டு விளக்கு, ரங்கோலி விளக்கு, ஓம் விளக்கு, ஸ்வதிக் விளக்கு, கற்பக விருட்சக விளக்கு உள்பட பல விதமான விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. அகல்விளக்கு ஒரு ரூபாய் முதல் ₹50 வரை, டெரகோட்டா விளக்கு ₹20 முதல் ₹200 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுக்கம்பட்டி உதயதேவரீஸ்வரி சமேத உதயதேவரீஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபதிருவிழாவையொட்டி நேற்று பரணி தீபம் ஏற்பட்டது. சோமவார பூஜையும், பிரதோஷ பூஜையும் நடந்தது. இன்று (10ம் தேதி) மாலை 6 மணிக்கு உதயதேவரீஸ்வரர் மகாதீபம் ஏற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை (11ம் தேதி) இரவு 12 மணிக்கு பவுர்ணமி பூஜை நடக்கிறது.

Related Stories: