பொதுமக்கள் எதிர்பார்ப்பு சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சீர்காழி, டிச.10:சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது.  பிரம்மவித்யாம்பிகை சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது கூறிப்பிடத்தக்கது. கார்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகங்கள் தமிழகத்தில் ஒருசில கோயில்களில் மட்டுமே பண்டைய காலத்தொட்டு நடைபெற்று வருகிறது. அதில் ஒருகோயிலாக இந்த கோயில் விளங்குவது கூறிப்பிடத்தக்கது. நேற்று கார்த்திகை நான்காவது சோமவாரம் மற்றும் பிரதோஷம் ஆகிய ஒரே நாளில் வந்தது மிகவும் விஷேசமானது என கூறிப்பிடத்தக்கது. இதனையொட்டி சுவேதாரண்யேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி 1008 சங்குகள் சிவ வடிவத்தில் சன்னதியின் முன்பகுதியில் வைக்கப்பட்டு அலங்கரிக்கபட்டு இருந்தது. மேலும் சங்குகளில் நறுமணப்பொருட்களால் ஆன புனிதநீர் நிரப்பட்டது.

மேலும் ஆலய அர்ச்சகர் ராஜாப்பாசிவாச்சாரியார் தலைமையில் வேதவிற்ப்பனர்களை கொண்டு மகா யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் கோயிலிலன் பிரகாரத்தில் ஊர்வலமாக மேளதாளம் முழங்கிட கொண்டு செல்லபட்டன. பின்னர் சுவேதாரண்யேஸ்வரருக்கு 1008 சங்குகளிலிருந்த புனிதநீரை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதே நேரத்தில் பிரதோஷத்தை முன்னிட்டும் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைதொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு தீபாராதனை காட்டபட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி முருகன், பேஸ்கர் திருஞானம், மேலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: