பக்தர்கள் எதிர்பார்ப்பு குடந்தையில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு

கும்பகோணம், டிச. 9: கும்பகோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கும்பகோணம் 15வது வார்டு வினைதீர்த்தான் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த 2 மாதமாக பாதாள சாக்கடை அடைத்து கொண்டதால் கழிவுநீர் மேன்ஹோல் வழியாக வெளியேறி தெருவில் தேங்கியுள்ளது. இதை நகராட்சி கண்டுகொள்ளவில்லை.இதை கண்டித்து நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள், கும்பகோணம்- தஞ்சை மெயின் ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர்.இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் வந்து உடனடியாக அப்பகுதி சீர் செய்யப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் பஸ்சை மறித்ததாக அப்பகுதியை சேர்ந்த உபயதுல்லா உள்பட 25பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: