கோயில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர், டிச. 4: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கருவனூர் கிராமத்தில் சோனைச்சாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல் நாள் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து மறுநாள் காலையில் காசி, ராமேஸ்வரம், அழகர்மலை உள்ளிட்ட பல்வேறு புனித தளங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் யாகசாலையில் வைக்கப்பட்டு அங்கிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது கோயிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று தரிசனம் செய்தபோது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சோனைச்சாமி கோயில் பங்காளிகள், உறவின்முறை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்

Related Stories:

>