ஒட்டன்சத்திரம் பெரியகோட்டையில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஆய்வு வெண்ணிகாலாடியார் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்

திண்டுக்கல், டிச. 3: சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடியாரின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழகர் விடுதலை களம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழர் விடுதலை களம் மாநில இளைஞரணி தலைவர் ஈஸ்வர பாண்டியன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்காக உயிர் நீத்த மாபெரும் வீரர் பெரிய காலடி என்ற வெண்ணிக்காலாடியார். இவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20ம் தேதியன்று பொதுமக்கள் அனுசரித்து வருகின்றனர். இந்த விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வழித்தடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: