இயற்கை நல உணவு பயிற்சி முகாம்

பழநி, மே 22: பழநியில் உள்ள தனியார் மண்டபத்தில் யோகா மையம் சார்பில் நேற்று இயற்கை நல உணவு பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் இயற்கை உணவு பழக்க வழக்கம் மூலமாக கிடைக்கும் ஆரோக்கியமான வாழ்வு, மனஅழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து ஆத்ம ரூப தியானம், மன அழுத்த மேலாண்மை, யோகாசன நன்மைகள் குறித்து யோகா ஆசிரியர் சிவக்குமார் எடுத்துரைத்தார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post இயற்கை நல உணவு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: