கோயில் கும்பாபிஷேக விழா

கோபால்பட்டி, மே 23: நத்தம் அருகே சாணார்பட்டி ஒன்றியம் புதுஆவிளிப்பட்டியில் செல்வவிநாயகர், காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்நாள் கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, தீபாராதனைகள் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 2ம், 3ம், 4ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்தமலை, காசி, ராமேசுவரம், வைகை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

The post கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: