2 மண்ணுளி பாம்பு பிடிபட்டது

சேந்தமங்கலம், நவ.22: சேந்தமங்கலம் அடுத்துள்ள ஜங்களாபுரத்தில், நேற்று மகளிர் சுயஉதவிக்குழு  கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 அடி பள்ளம் தோண்டிய போது, உள்ளே 2 மண்ணுளி பாம்புகள்  இருப்பதை கண்டனர். இதுகுறித்து நாமக்கல்  வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த நாமக்கல் வனச்சரகர்  ரவிச்சந்திரன், வனவர் தமிழ்வேந்தன், வனக்காப்பாளர் பாலசுப்ரமணியன்,  மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மண்ணுளி பாம்புகளை பிடித்துச்சென்று,  கொல்லிமலை காப்புக்காட்டில் விடுவித்தனர்.

Related Stories: