மழை வேண்டி வருண யாகம்

ராசிபுரம், மே 9: ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பொன்பரப்பிபட்டி பகுதியில் உள்ள சுப்பிரமணிய கோயில்களில் மழை வேண்டி, சிறப்பு வருண யாகம் நடந்தது. பூஜையில் வருண யாங்கள், வர்ண ஜெயம், லட்சுமி ஹோமம், குபேர ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுப்பிரமணியர் மூல மந்திர ஹோமம், வருண பகவானுக்கு மழைவேண்டி பல்வேறு ஹோமம் நடந்தது. பின்னர் சுமங்கலி பெண்களுக்கு சுமங்கலி பூஜை, சப்த கன்னிமார் பூஜைகள் நடந்தது. பின்னர் மழை வேண்டி சிவாச்சாரியார்கள் 2மணி நேரம் நீரில் அமர்ந்து வர்ண பூஜை நடத்தினர்.

The post மழை வேண்டி வருண யாகம் appeared first on Dinakaran.

Related Stories: