கோடை மழைக்கு வாய்ப்பு

நாமக்கல், மே 9: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், வரும் நாட்களில் வானம் லேசான மேக மூட்டத்துடனும், மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 105.8 டிகிரியும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். கோழிகளுக்கான தீவன எடுப்பு குறைந்து உள்ளதால், முட்டை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோடைகால தீவன மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும். வைட்டமின் ‘சி’ சத்துக்கள் கொண்டவற்றை தீவனத்தில் கலந்து கோழிகளுக்கு இடவேண்டும். தீவனத்தை காலை 5 முதல் 10 மணி வரையிலும், மாலையில் 5 முதல் 9 மணி வரையில் மட்டுமே தரவேண்டும். இதன்மூலம் கோழிகளை வெப்ப அதிர்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post கோடை மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: