சீர்காழி அருகே திருவாலி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி, நவ.20: சீர்காழி அருகே திருவாலியில் சுமார் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் வரும் நீரை பயன்படுத்தி திருவாலி, மண்டபம், புதுத்துறை, நெப்பத்தூர், தென்னாம்பட்டினம், மாத்தான்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 450 ஏக்கரில் விவசாயிகள் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஏரியில் ஒரு ஆண்டுக்கு சுமார் 17 மில்லியன் கனஅடிதண்ணீர் சேமிக்க முடியும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு ஏரி தூர் வரப்பட்டதால் இந்த ஆண்டு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், போதிய மழை பெய்தாலும் ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியில் அதிகளவில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் பாசனத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்கின்றன. மேலும் ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நல்ல குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது மேலும் மின்மோட்டார் களில் நல்ல தண்ணீர் வருவதால் நெற்பயிருக்கு பயனுள்ளதாக இருக்குமென விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருவாலி ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: