பேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு, நவ.14: பேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த வங்கியில் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளனர். மேலும், குடியாத்தம்- ஆம்பூர் செல்லும் பிரதான சாலையில் இந்த ஏடிஎம் உள்ளதால் பெரும்பாலான வாடிக்கைளர்கள் இந்த ஏடிஎம்மை பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த ஏடிஎம் முகப்பில் கழிவுநீர் கால்வாய் உள்ளதால் அதை கடந்து தான் ஏடிஎம்மிற்குள் செல்ல வேண்டும்.

அவ்வாறு அங்குள்ள கழிவுநீர் கால்வாய் சரியாக மூடாததால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.  இதனால், இரவு நேரங்களில் ஏடிஎம்மிற்கு வரும் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து, புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>