பிரதமர் கிசான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு உண்ணாவிரதம்

வேதாரண்யம், நவ.13: வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் மேற்கு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இந்திய கம்னியூஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.வேதாரண்யம் ஒன்றியம் பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தில் உள்ள அனைத்து சிறுகுறு பெருவிவசாயிகளுக்கும் பாரத பிரதமரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தபடும் கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் பெறுவதில் விடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனே இணைத்திட வேண்டும், அனைத்து வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி யூரியா, டிஏபி உரம் மற்றும் விவசாயக்கடனும் பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். விவசாய சங்க ஒன்றியத் தலைவர் காசிஅருள்ஒளி தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தை இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் துவக்கி வைத்தார்.உண்ணாவிரத்தில் கிளைச் செயலாளர்கள் இளவரசன், செந்தில்குமார், ஆனந்தன், பழனியப்பன், ராசேந்திரன், கணேசன், சுப்பிரமணியன் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜெயா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன் உண்ணாவிரத்தை முடித்து வைத்தார்.

Related Stories: