ஐப்பசி மாத பவுர்ணமி தியாகராஜர்சுவாமி கோயிலில் வன்மீகநாதர் அசலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

திருவாரூர், நவ.12: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் இருந்து வரும் வன்மீகநாதர் மற்றும் அசலேஸ்வரர் சுவாமிகளுக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று திருவாரூரில் வரலாற்று தியாகராஜஸ்வாமி கோயிலின் மூலவரான வன்மீகநாதர் மற்றும் அசலேஸ்வரர் சுவாமிகளுக்கு இந்த அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் 60 கிலோ எடையிலான அரிசி மூலம் சாதம் தயார் செய்யப்பட்டு அதனை கொண்டு 2 சுவாமிகளுக்குஅலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் அந்த சாதமானது பக்தர்களுக்கு வழங்கப் பட்டன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: