வசிஷ்ட நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டும் இடத்தை கலெக்டர் ஆய்வு

ஆத்தூர், நவ.8: ஆத்தூர் நகராட்சியில் உள்ள வசிஷ்ட நதி பகுதியில், பாலம் கட்டப்பட்டு நீண்ட நாட்களான நிலையில், தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ளதாலும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நகரப்பகுதிக்கு வருவதற்கு ஏதுவாகவும், தற்போது உள்ள பாலத்தை அகலப்படுத்தி புதியதாக பாலம் அமைக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அறிவித்தார். இந்நிலையில் நேற்று, கலெக்டர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகள், தற்போது உள்ள பாலத்தினை அகலப்படுத்த தேவையான இடவசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், நகராட்சி முன்னாள் துணை தலைவர் மோகன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் சகாதேவன், முரளி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: