குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

கோவில்பட்டி, நவ.7: கோவில்பட்டியில் குடியிருப்புக்குள் புகுந்து சாரைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கோவில்பட்டி நகரில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்தது. இம்மழையால் நகரில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் அமைந்துள்ள கதிர்வேல் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பு பகுதியில் உள்ள முட்புதரில் சாரைப்பாம்பு நடமாடுவதாக அப்பகுதி மக்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.    இதையடுத்து நிலைய அலுவலர் இசக்கி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கதிர்வேல் நகரில் உள்ள ஒரு குடியிருப்பிற்குள் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை குருமலை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Related Stories: