திருவள்ளுவர் சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யகோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், நவ. 7: திருவள்ளுவர் சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யகோரி கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட்டில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தனர். இதை செய்த சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவிசெழியன், நகர செயலாளர் தமிழழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சின்னை பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: