நாகப்பாம்புக்கு அறுவை சிகிச்சை

திருப்பரங்குன்றம், நவ. 7: திருப்பரங்குன்றம் அருகில் காயத்துடன் பிடிபட்ட நாகப்பாம்பு அறுவை சிகிச்சைக்கு பின், வனப்பகுதியில் விடப்பட்டது.திருப்பரங்குன்றம் அருகில் உள்ள விளாச்சேரி முனியாண்டிபுரத்தில் குடியிருப்பு பகுதி அருகில், சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க நான்கு அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று உடலில் காயத்துடன் நகர்ந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த வனத்துறையினர் திருநகர் ஊர்வனம் அமைப்பின் உதவியோடு, அடிபட்ட பாம்பை பத்திரமாக மீட்டு, மதுரை தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் டாக்டர்கள் அடிபட்ட பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். இரண்டு மணி நேரம் கழித்து அந்த பாம்பை வனத்துறையினர் நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.

Advertising
Advertising

Related Stories: