திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி திருக்குறள் தொண்டு மையத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, நவ.7: தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலையில் நேற்று திருக்குறள் ெதாண்டு மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த 3ம் தேதி இரவு மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையின் கண்களில் கருப்பு பேப்பரால் மறைத்தும், முகத்தில் மாட்டு சாணத்தை வீசியும் அவமதிப்பு செய்தனர். இதனை கண்டித்தும், மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே நேற்று திருக்குறள் ெதாண்டு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மைய தலைவர் குப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். கேப்சன்... தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலையில் நேற்று திருக்குறள் ெதாண்டு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertising
Advertising

Related Stories: