மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தொடர் ஸ்டிரைக் பணிகள் பாதிக்கும் அபாயம்

காரைக்குடி, நவ.5:  மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலி வழங்கக் கோரி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 35க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். மின்வாரியத்தில் நிரந்தர பணியாளர்கள் குறைவாக உள்ளநிலையில், இவர்கள் தான் மின்கம்பம் ஊன்றுவது, புதிய சர்வீஸ் வழங்குவது, இரவு நேரங்களில் மின்சாரம் தடை ஏற்பட்டால் சரி செய்வது உள்பட அத்தியாவசிய பணிகளை பார்க்கின்றனர். பல வருடங்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு இதுவரை அரசின் சார்பில் சம்பளம் வழங்கப்படுவது கிடையாது.

எனவே மின் நுகர்வோர்கள் தரும் தொகையை வைத்தே சமாளித்து வந்தனர். இந்நிலையில் தினகூலி ரூ.380 நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒப்பந்த பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் மின்வாரிய அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் சங்க மதுரை திட்ட தலைவர் சோலை தலைமை வகித்தார். திட்ட செயலாளர் சிவசேகரன், திட்ட பொருளாளர் காசிவிஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: