திருத்துறைப்பூண்டி நகரில் சுற்றி திரியும் பன்றிகள் பிடித்து அகற்றம்

திருத்துறைப்பூண்டி, நவ.5: தினகரன் செய்தி எதிரொலியால் திருத்துறைப்பூண்டி நகரில் சுற்றிதிரிந்த பன்றிகளை நகராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றியது.திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அவை வீதிகளில் குவிந்துள்ள குப்பைகள், கழிவுநீர் குட்டைகளில் உலாவுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்துவது வாடிக்கையான ஒன்றாகும். ஆனால் இந்தாண்டு அதிகளவில் பன்றிகள் தொல்லை அதிக அளவிலுள்ளது. எனவே, நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நேற்று நகராட்சி பணியாளர்கள் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினகரன் நாளிதழுக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: