கட்டிமேடு, காடுவெட்டி அரசு பள்ளியில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டி, நவ.1: திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்ததினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பாலு தலைமை வகித்தார். ஆசிரியர் ரகு வரவேற்றார். மனவளக்கலை பேராசிரியர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. பல உறுதியான நடவடிக்கைகள் மூலம் 500க்கும் மேற்பட்ட சிற்றரசுகளை இந்தியாவோடு இணைத்து வலிமையான இந்தியா உருவாக்கத்தில் பட்டேலின் பங்கு மகத்தானது. ஜாதி மத இன மொழி அடிப்படையில் பிரிவினையை தூண்டும் போது அவற்றுக்கு பலியாகாமல் மாணவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு இந்தியர் என்ற பெருமித உணர்வோடு மாணவர்கள் இருக்க உறுதியேற்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் தேசிய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி கட்டுரைப் போட்டி, பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் இளங்கோவன், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நலப்பணித்திட்ட அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

முத்துப்பேட்டை:முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் மற்றும் அன்னை இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிக்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றாக நின்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அவர்களது படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள் அருளானந்தம், துரைராசு, பொற்செல்வி, முருகையன், அன்புச்செல்வி, பிரபாகரன், கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் விசுவநாதன் தலைமையில் ஒன்றுமை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக  திட்ட அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இலக்கிய மன்ற தலைவர் ராஜமோகன் கலந்து கொண்டு சர்தார் வல்லபாய் படேல் பற்றி பேசினார். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் சதீஷ்குமார், கோவிந்தராஜன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட  மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: