திண்டுக்கல் வந்த முதல்வருக்கு வரவேற்பு

திண்டுக்கல், அக். 31: முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வர் திண்டுக்கல் வழியாக சேலம் செல்வதாக இருந்தது. அதற்காக காலையிலிருந்தே கொட்டும் மழையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல்லில் இருந்து திண்டுக்கல் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் முதல்வர் வரவுள்ள திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அரசு விருந்தினர் மாளிகை முன்பு மழையில் பொதுமக்கள், அதிமுக தொண்டர்களை காக்க வைத்திருந்தனர். பின்னர் மதியம் 12 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அப்போது அவரை அமைச்சர் சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி, டிஆர்ஒ வேலு, எஸ்பி சக்திவேல், வன அலுவலர் வித்யா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், துணை தலைவர் கண்ணன், அபிராமி கூட்டுறவு தலைவர் பாரதி முருகன், துணை தலைவர் ராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Related Stories: