குழாய் உடைப்புகளை சரி செய்யாத மாநகராட்சி

ஈரோடு, அக். 27:திட்டப்பணிகளின் போது ஏற்பட்ட குழாய் உடைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் உள்ளதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாநகராட்சி 4வது மண்டலத்திற்குட்பட்ட 56வது வார்டு பகுதியில் மீரான் மைதீன் வீதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக புதிய வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டது.

அப்போது சாலையில் குழிகள் தோண்டப்பட்ட போது ஏற்கனவே இருந்த போர்வெல் தண்ணீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்தன. ேசதமடைந்த இக்குழாய்களை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுக்காமல் உள்ளதால் போர்வெல் தண்ணீர் கடந்த 2 மாதங்களாக விநியோகம் செய்வது தடைபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியப்போக்கினை கடைபிடித்து வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இதே நிலை தொடர்ந்தால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: