தாந்தோணிமலை கோயில் குளத்தில் நேர்த்தி கடனாக செலுத்தி அகற்றப்படாத உப்பு குவியல்

கரூர் அக். 27: தாந்தோணிமலை கோயில் குளத்தில் நேர்த்திக்கடனுக்காக செலுத்தப்பட்ட உப்பு அகற்றப்படாமல் உள்ளது. தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோயிலில் புரட்டாசி திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோயில் தெப்பகுளத்தில் உப்பை வீசுவது வழக்கம். இவ்வாறு வீசப்பட்ட உப்பு குளத்தில் குவிந்து கிடக்கிறது. திருவிழா முடிந்து ஒருவாரத்திற்கு மேல் ஆகியும் இந்த உப்பு குவியல் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.

குளத்திற்கு போதுமான நீர்வரத்தில்லை. டேங்கர்களில் தான் தண்ணீர் கொண்டுவந்து நிரப்புவது வழக்கமாக உள்ளது. எனவே உப்பு குவியலை அகற்ற வேண்டும். குளத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை கோயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: