மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம்

கடலூர், அக். 25: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களது தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கி வருகிறது.நடப்பு (2019-20) நிதி ஆண்டில் மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இதில் கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் காது கேளாத, வாய் பேச முடியாத மிதமான வளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளிகள், 18 வயது முதல் 45 வயது வரை கடுமையான மன வளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம்  வழங்கப்பட உள்ளது.

இதை பெற விரும்புபவர்கள் வெள்ளைத்தாளில் விண்ணப்பமும், மாற்றுத்திறனாளி அடையாள அட்டையின் அனைத்து பக்கங்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்ற சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படத்துடன் மாவட்ட திறனாளிகள் நல அலுவலகம், புதிய ஆட்சியர் அலுவலக வளாகம், கடலூர் என்ற முகவரிக்கு தபால் வழியாகவோ அல்லது நேரிலோ வரும் நவம்பர் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Related Stories: